
அகத்தியர் வாழும் பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,150 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் கூறலாம்.
இப்பொதிகை மலை இயற்கை : அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், புல்வெளிகள் மரங்கள் நிறைந்த காடுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.
அகத்தியர் தமிழ் முனிவர்: அகத்தியர் தமிழ் முனிவரைத் தரிசிக்க திருவனந்தபுரம் (கேரளம்) பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் (Guide) மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.
தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்.
ஓம் அகத்தீசாய நம.