வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...
தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்...
அவன் மண்ணை பார்த்து சிந்தித்தபோதே... விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்...

அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்....
இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.
இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணிநேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது.ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கும் நடைபெற வேண்டும்... ஆனால் 62 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகளும் நடக்காமல், குடமுழுக்கும் நடைபெறாமல் இருக்கிறது.
இதனால் பாழடைந்த நிலையில் உள்ள கோவிலை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் இந்த பகுதி மக்கள்.. தவறாமல் காலம் காட்டும் இந்த கடிகாரத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
No comments:
Post a Comment