Wednesday, September 11, 2013

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பார்வையில் பாரதியார்

                                         

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பார்வையில்... 
சுப்பிரமணிய பாரதியார்

இந்திய வரலாற்றில் இரண்டு தத்துவ மரபுகள் உண்டு. ஒன்று வைதீக மரபு. மற்றொன்று அவைதீக மரபு. வைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக இராமானுசர், விவேகானந்தர், காந்தியார், பாரதியார் ஆகியோரை குறிப்பிடலாம். அவைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக வள்ளலார், சித்தர்கள், பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் ஆகியோரைச் சொல்லலாம். 

நேரெதிர் முரண்பாடு கொண்ட பாரதியையும் பாரதி தாசனையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்தவை தமிழ்மொழி உணர்ச்சியும் சாதியெதிர்ப்பும் என்றால் மிகையாகாது.

பெரியாரை ஆசனாக வரித்துக் கொண்ட பாரதிதாசன் பெரியாரைக் கூட விமர்சித்தது உண்டு. ஆனால் பாரதியாரை ஒருபோதும் விமர்சித்ததில்லை. பாரதி ஆத்திகராக இருந்த போதிலும் அவர் மீது பாரதிதாசன் அளவிடற்கரிய பற்று கொண்டிருந்தார். கனக சுப்பு ரத்தினம் எனும் தனது இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றியவர். அதற்காக கடுஞ்சட்டைத் தோழர்கள் கணை பாய்ச்சிய போதும் அவர் கலங்க வில்லை. பாரதிதாசன் பெயர் வைத்தது தவறென்று எண்ணியதுமில்லை. சாகும் தருவாயிலும் தவறென்று வருந்தியதுமில்லை. தான் "பாரதிதாசன் என்று பெயர் வைத்ததற்கு காரணம் அப்போது அவர் என்னுளத்தில் முதலிடம் பெற்றிருந்தது தான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார் தாம். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்த வரை நான் கண்டதில்லை. 

பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்டுகளுக்குப் பிறகே பெரியார் இயக்கம் தோன்றியது" என்று வசவாளர்களுக்கு பதிலடி தந்தார். பெரியாருடன் நெருக்கமான நிலையிலும் 1935இல் பாரதியின் நிறைவேறாமல் போன விருப்பமான 'சுப்பிரமணிய கவிதா மண்டலம்' இதழைத் தொடங்கினார். தந்தை பெரியாரை விட்டு விலகிய நிலையிலும் 1964இல் பாரதியார் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க விரும்பினார். தமிழ்ச் சான்றோர்களுக்கு திரைப்படத்தில் மகாகவி பாரதி என்கிற விண்ணப்பத்தை அனுப்பி நிதி வேண்டினார். அக்காரியம் கைகூடுவதற்குள் பாரதி தாசன் மறைந்து போனார்.

திராவிட இயக்கத்தால் போற்றப்படும் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் பாரதிதாசன் தன்னிடம் கூறியதாக கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்: பாரதியைப் போல் நானும் அன்று பேராயக்கட்சியை சார்ந்தவன். கதரைத் தோளில் சுமந்து விற்றவன். நானும் ஆத்திகன். சுப்பிரமணியர் துதியமுது பாடியவன். அப்போது அவரிடத்திலும் தனித் தமிழ் இல்லை. என்னிடத்திலும் தனித் தமிழ் இல்லை. பாரதி படிப்படியாக சீர்திருத்தவாதியாக மாறி வந்ததை கண்ணாரக் கண்டேன். பாரதி உயிரோடிருந்தால் சுயமரியாதைக் காரனாக மாறியிருப்பார்." பாரதி தாசன் கூற்று இப்படி இருக்க பாரதியாரை வைதீகச் சிமிழுக்குள் அடைக்க ஆரியத்தின் பாரதீய சனதா பார்ட்டிகளும், திராவிடத்தின் பாரதீய சனதா பார்ட்டிகளும் முயன்று வருவது வேடிக்கையாக உள்ளது. 

Sunday, September 8, 2013

சித்தர்கள்

             
சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்.

1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.

உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.

Friday, September 6, 2013

தியாகி கக்கன்


எம்.எல்.எ.-வாக எம்.பி-யாக இருந்தது மட்டுமில்லை...காமராஜர் ஆட்சியில் பத்து ஆண்டுகள் மந்திரியாக வேறு இருந்தவர்...அதுவும் பொதுப்பணித்துறை மந்திரி...மேட்டூர் அணை, வைகை அணை எல்லாம் கட்டுமானப்பணி மேற்கொண்டவர்...
         
தன் வயதான காலத்தில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து இருந்தவர்...எம்.ஜி.யார். வந்து சந்தித்த பிறகே அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் யார் என்பதே தெரியும்...

எதையாவது தாங்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என எம்.ஜி.ஆர் தொடர்ந்து வற்புறுத்தவே அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் மட்டும் போதும் என்று பெற்றுக் கொண்டவர்

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது – பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! – பழ நெடுமாறன்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:

வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழ் ஈழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல் திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நா`ட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.கிழக்கே சீனா முதல் மேற்கே ரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்க விட்டார்கள்.அந்த வீரம் மிக்க வழியிலே வந்த நம் மக்கள், நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த போது புலிகளாக மாற்றி உலகத்தையே பிரமிக்க வைத்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேர் என்னவென்றால் பிரபாகரன் அவர்களின் நட்பும் தோழமையும் எனக்கு கிடைத்ததை பெரும் பேராக கருதுகின்றேன்.

கடந்த முப்பது ஆணடுகளுக்கு மேலாக அவரோடு நெருங்கி பழகி அவரது இலட்சிய நோக்கத்தை புரிந்து கொண்டவன் என்கின்ற முறையில் அவர் தலைமை தாங்கி நடத்துகின்ற போராட்டம், தமிழர்களை விடுவிக்கின்ற போராட்டம் மட்டுமல்ல அது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடிவை கொண்டுவரப் போகின்ற போராட்டம் என்பதை நான் தெளிவாக உணர்ந்தவன் என்கின்ற முறையில் தெரிவித்த பல செய்திகள், அவர் கைப்பட எனக்கு எழுதிய கடிதங்கள், அவர் மட்டுமல்ல, அவர் பெற்றோரும் குடும்பத்தினரும் கூறிய செய்திகள், அவரின் முக்கிய இளமைப் பருவ தோழர்கள், பிற்காலத்தில் அவரது படையில் தளபதிகளாகி வீரசாகசங்கள் புரிந்தவர்கள், என அவர்கள் எனக்கு தெரிவித்த முக்கிய செய்திகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்) என்ற இந்நூலை மூன்று ஆண்டுகள் எழுதியிருக்கின்றேன்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பல்வேறு தேசிய இனங்கள் விடுதலைக்காக போராடிய நூற்றாண்டு ஆகும். இன்னமும் அத்தகைய விடுதலைப் போராட்டங்கள் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டங்கள் உண்டு. இந்தியாவின் மகத்தான தலைவர்களில் ஒருவரான நேதாஜீ சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் சிங்கப்பூரிலே சுதந்திர இந்திய அரசை அமைத்து, இந்திய இராணுவத்தை அமைத்து, இந்திய விடுதலைக்காக போராடிய வரலாறு ஒரு மெய் சிலிர்க்கவைக்கும் வரலாறு ஆகும்.

ஆனால் உலகமறிந்த மாபெரும் தலைவர் சுபாஸ் சந்திர போஸ் அவர்களுக்கு அன்று வல்லரசாக விளங்கிய ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, போன்ற நாடுகள் ஆதரவளித்தன. வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை மதிப்புக்குரிய கோசிமின் நடத்திய போது அவருடைய அந்த போராட்டத்திற்கு செஞ்சீனமும் சோவியத் ஒன்றியமும் எல்லா வகையிலும் துணை நின்றன.

அதைப்போல பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது யாசர் அரபாத் அவர்கள் அதற்கு தலமை தாங்கினாலும் இருபத்தியேழு அரேபிய நாடுகள் அவருக்கு பக்கபலமாக நின்றன.சோவியத் ஒன்றியம் இந்தியா செஞ்சீனம் போன்ற நாடுகள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் எல்லாம் அவருக்கு அங்கீகாரம் அளித்தன. வங்க தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது இந்தியா முழுமையாக உதவியது.அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேச விடுதலையை உறுதி செய்தார்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டங்களிலேயே தனித்தன்மை வாய்ந்த போராட்டம் எதுவென்று சொன்னால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம்தான். பிரபாகரன் அவர்கள் தலைமையில் தமிழீழ போராட்டம் அன்று நடைபெற்ற போதும், இனி நடைபெறப் போகின்ற போதும் சரி அந்தப் போராட்டத்திற்கு உலகில் எந்த நாடோ, எந்த ஒரு அரசோ, ஒரு சிறு உதவி கூட செய்யவில்லை.

மாறாக இந்தியா போன்ற அன்றை நாடுகளே அதற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
                                     
இந்த சூழ்நிலையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரகாகரன் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் துணைகொண்டு அவருடைய நாட்டைச் சேர்ந்த இளைஞர்களையும் யுவதிகளையும் மட்டுமே நம்பி இந்த வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்த நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களை நான் முன்பு குறிப்பிட்ட உலகறிந்த தலைவர்களோடு ஒப்படும் பொழுது வயதாலும் அனுபவத்தாலும் அவர் மிக மிக இளையவர் என்பதில் சந்தேகமில்லை. அந்த தலைவர்களுக்கு எல்லாம் உலக நாடுகள் பல சேர்ந்து துணை நின்றன.அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் நாடோ எந்த அரசோ உதவாமல் தனி மனிதனாக பிரபாகரன் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆங்கிலத்திலே சொல்வதானால் It is Unique… இந்த மகத்தான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டிய கடமை எல்லா தமிழர்களுக்கும் உண்டு.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீர காவியத்தை அடிப்படையாக கொண்டு நம்முடைய இயக்குனர் வ.கௌதமன் அவர்கள் திரைக் காவியமாக அதை படைக்கவிருப்பதை அறிய மகிழ்கின்றேன். நம்முடைய தம்பி கௌதமன் தியாக முத்திரை பதித்த ஒரு தமிழ் தேசியக் குடும்கத்தின் வழித்தோன்றல்.அவர் இந்தப் படத்தை எடுப்பது எல்லாவகையிலும் சாலச் சிறந்தது என்று நான் கருதுகின்றேன். வள்ளுவ பேராசான் சொன்னது போல “இதனை இவன் இதனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்று சொன்னார்.

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பத்து கோடி தமிழர்களுக்கு நடுவே புரட்சி மலராக மலர்ந்து மணம் வீசி நமது தமிழின பெருமையை உலகறியச் செய்த தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய இந்த திரைக்காவியத்தை எடுப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி பெற்றவர்.அதற்கான ஆற்றலும் அறிவும் அவரிடம் நிறம்பவே உண்டு. எல்லாவற்றிற்கு மேலாக ஒரு உண்மையான தமிழனாக திகழ்கின்றார். அவர் இப்படத்தை எடுப்பதை நான் மனதார பாராட்டுகின்றேன். மேலும் அவர் படைக்கவிருக்கும் இத்திரைக்காவியத்தை உலகத் தமிழர்கள் வரவேற்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

உலகிற்கு இந்த திரைக்காவியம் ஒரு உன்னதமான தமிழ் மகனின் வரலாற்றை எடுத்துச் செல்லும் காவியமாக இது திகழும். அதற்கு எல்லாவகையிலும் துணை நிற்பதற்கு ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும்.மேலும் இத் திரைப்படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்து சக்தியாக அமையும் என்பதால் இதற்கு ஆதரவு தாருங்கள் என்று உங்களை மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழர்களின் வரகு தானியப் பயன்பாடு!

 நன்றி Sasi Dharan

திரும்பும் இடமெல்லாம் சிற்பங்கள் நிறைந்த வரதராஜ பெருமாள் கோயில், புதுச்சேரி அருகே இருக்கும் திருபுவனை என்னும் ஊரில் உள்ளது. இது கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் "பராந்தக சோழன்" காலத்தில் கட்டப்பட்டதாகும். தமிழகத்தில் 1000 ஆண்டுகள் கடந்த கோவில்களி
ல் இதுவும் ஒன்றும்.தொல்லில்யல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலில் சில அறிய வரலாற்றுத் தகவல்கள் நமக்கு கிடக்கின்றன.

முதலாம் ராஜேந்திர சோழன் ஆறாவது ஆட்சியாண்டில், கி பி 1018 ஆண்டு, இந்த வரதராஜ பெருமாள் கோயிலில் ஊராளும் பேரவை கூடியது வீரநாராயண விண்ணகர ஆழ்வார்கோயில் முற்றத்தில் அவர்கள் கூடினர் .இக்கூட்டத்தில் ஏரி நீர் பாயும் அனைத்து நிலங்களுக்கும் வரி விதிப்பது எனமுடிவு எடுக்கப்பட்டது . ஆதாரம் ARE 192 OF 1919

 
கல்வெட்டு
".............வரகு விளைந்த நிலத்தால் அருமாவாற் கலவரகு ஏரி
ஆயமாவதாகவும் , அருமாவாற் கலநெல்லு கொண்டு மதுராந்தகப பேரேரிக்கே ஏரி
ஆயமாகக் கொள்வதாகவும் "

என்று வரகு விளையும் நிலங்களுக்கும் நெல்லுக்கு போலவே' நாலாயிரவன்' என்னும் மரக்காலால் ஒரு கலம் ஏரி ஆயம் வசூலிப்பது எனத தீர்மானித்ததை தெரிவிக்கிறது .

தமிழர்களின் வரகு தானியப் பயன்பாடு ஆயிரம் ஆண்டு வரலாற்றுத் தொடர்புடையது என்பதை இந்த கோயில் கல்வெட்டு மூலம் ஒரு சான்றாக கிடைகின்றது.  
  
  

ராஜேந்திர சோழன் காலத்தில் கல்லூரி ...........


  

விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் என்ற கிராமத்தில் சுமார் 900 வருடங்களுக்கு முன் ராஜேந்திர சோழன் காலத்தில் கல்லூரி ஒன்று இயங்கி வந்தது, கைபடும்,கால்படும் இடம் என்ற ஒரு இடம் கூட இடைவெளி இல்லாமல் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படும் இந்த இடத்தில் இருநூற்று எழுபது பட்டபடிப்பு மாணவர்களும், எழுபது பட்டமேற்படிப்பு மாணவர்களும், அவர்களுக்கு கல்வி சொல்லித் தர தகுதி வாய்ந்த பனிரெண்டு ஆசிரியர்களும் இருந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் பத்தாயிரத்து ஐநூற்று ஆறு களம் நெல் மற்றும் அறுபத்தொன்றரைக் கழஞ்சுப் பொன்னும் செலவிடப்பட்டுள்ளது.

இந்த கல்லூரியின் நிர்வாகத்தை அரசோ,பல்கலைக் கழகமோ,நகராட்சியோ மேற்கொள்ளவில்லை.ஒரு கிராம சபையே மிக ஒழுங்குடன் இதை பராமரித்து வந்துள்ளது.ஆண்டு தோறும் இந்த செலவை ஈடுகட்ட வாய்பாக வருடம் தோறும் இந்த வருவாயை தரவல்ல 45 வேலி நிலத்தை இந்த கிராம சபையினர் இக்கல்லூரியை நடத்தி வந்த கோயிலுக்கு கொடையளித்தனர்.இன்றைக்கு வங்கிக்கணக்கில் வைப்பு நிதி பெறுவது போல், இந்த நிலம் வைப்பு நிதியாகக் கொல்லப்பட்டு, இந்த நிலத்தில் விளையும் விளைச்சல் கல்லூரிச் செலவுகளை ஈடுகட்டும் வட்டியாக பெறப்பட்டுள்ளது!. எல்லா கோவில்களை போல் இதுவும் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்ததை, தற்போது மதிய தொல்லியல் துறை பராமரித்து வருகின்றது.
   
   

இசைக் குதிரைகள்.........!

 நன்றி தோழர்  Sasi Dharan
                             
விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதிக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் "சேந்தமங்கலம்" என்னும் கிராமம் உள்ளது. இன்றைக்கு சிறு கிராமமாக இருக்கும் இந்த இடம் கி.பி. 12-13 நூற்றாண்டில் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனின் தலை நகராக விளங்கியது. சோழ மன்னனையே கைது செய்து 6 ஆண்டு காலம் சிறையில் வைத்திருந்த இந்த குறு நில மன்னன், தன்னுடைய தலை நகரில் கோட்டை போன்ற அமைப்பில் பெரிய மதில் சுவர் சூழ "வானிலை கண்டீஸ்வரர்" என்ற பிரம்மாண்டமான கோயிலை அமைத்தான், கோட்டை சுவரின் நான்கு புறங்களிலும் காவலாளிகள் நிற்க பெரிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கும் இந்த கோயிலை மத்திய தொல்லியல் துறை பழைய முறைப்படி பல வருடங்களாக அழகாக புதுப்பித்து வருகின்றது. 

                            

அப்படிப்பட்ட அந்த கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நான்கு புறங்களிலும் அழகிய படிகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில் மிக்க கருங்கல் மண்டபத்தையும் கட்டியுள்ளனர். ஒரு குதிரைக்கும் மறு குதிரைக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தாலே அன்று இது எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகின்றது. இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.

                     

சீறிப்பாய்வது போல் நின்றுகொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல வித ஒலிகளை எழுப்புகின்றது!. இது குறித்து விஜய் தொலைக்காட்சியில் கூட ஒரு முறை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. இதில் ஒரு குதிரை தரையில் விழுந்து ஒடிந்த நிலையில் பரிதாமாக கிடக்க, எஞ்சியுள்ள ஒரு குதிரையின் படம் தான் இது. இதை பார்க்க வரும் மக்கள் அனைவரும் ஒலி எழுப்ப இதை கல்லை கொண்டு அடிப்பதால் குதிரை பாழாகின்றது என்று தற்போது வேலி போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது
                                                                                                                                   

 

Like ME

Sample Text

Sample Text