Saturday, November 16, 2013

தாலாட்டு - செந்தமிழே கண்ணுறங்கு!

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ 
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ 
காராரும் வானத்தில் காணும் முழுநிலவே! 
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே! 

ஆசை தவிர்க்க வந்த ஆணழகே சித்திரமே! 
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே! 
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே
என்மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே! 

சின்ன மலர்வாய் சிரித்தபடி
பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு! 
நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில்
வாளேந்திச் சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் 

கனலேற்ற வந்த களிறே,
எனது மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே! 
தேக்குமரம் கடைந்து செய்ததோரு தொட்டிலிலே 
ஈக்கள் நுழையாமல் இட்ட திரை நடுவில், 
பொன் முகத்தி லேயிழைத்த
புத்தம் புதுநீலச் சின்ன மணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்; 

அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக் 
கொள்ளைநோய் போல் மதத்தைக் கூட்டியழும் வைதீகத்தைப் 
 போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா! 
வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும் மூடப்பழக்கத்தைத் தீ தென்றால் முட்டவரும் 

மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த 
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு!
'எல்லாம் அவன் செயலே' என்று பிறர்பொருளை வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும் 

காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும் வேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும், மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு!

நெஞ்சினில் ஏற்றிய நெருப்பினை அணையாது காத்திடல் வேண்டும்









இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு

இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு
***********************************
          
இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால்அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள்.

அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமையாக அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கோளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. இரக்ககுனத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள். .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. .மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.

இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள்.

சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர், யாரவது துன்பபடுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிச்சென்று அவர்களுக்கான உதவிகளை செய்துவிடுவார்.

ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள். அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள். புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால். அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில் 1995 ஆம் ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது.

எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான். தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும், துன்புறுத்தியும் படுகொலை செய்தான். உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்றோடு நடந்தும், ஓடியும், விழுந்தும், எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒருவழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர். சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள்.

வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள். தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள்.

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தமானால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள். 1999 ஆம் ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா.

இயக்கத்தில் இணைந்துகொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா.. சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்தக்கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது. இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்கபோகின்றது என்பது தெரிந்தோ என்னவோ “இசையருவி” என பெயர்சூட்ட பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்ச்சிகளை முடித்தாள்.

சோபனா, தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள். இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவுசெய்ய வைத்தது. இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்.

இப்படி தன் வாழ்கையை கடந்து வந்த இசைப்ரியாவிற்க்கு சிங்களவனால் நடந்த கொடுமை சொல்லில் அடங்காத துயரம் . ஓர் பெண்ணிற்கு நடந்த வன்கொடுமைகளை உலகத்திற்கு சொல்ல மனமும் வரவில்லை , சொல்லாமலும் இருக்க முடியவில்லை .
இனி உலகில் எந்த ஓர் தமிழ் பெண்ணுக்கும் இந்நிலை ஏற்படாமல் காப்பது ஒவ்வொரு தமிழ் ஆண்களின் கடமை ..

நெடுமாறன்

யார் அந்த நெடுமாறன்?
------------------------------------------------
                                            
மதுரையில் 72-ம் ஆண்டு தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அதற்காக உள்ளூர் வியாபாரிகளிடம் தி.மு.க-வினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுபற்றி அப்போது மதுரைக்கு வந்த ஆளுநர் கே.கே.ஷாவிடம் நெடுமாறன் புகார் மனு அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான முதல் புகார் மனு அதுதான். பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாநாட்டில் பேசிய முரசொலி மாறன், 'யார் அந்த நெடுமாறன்? அட்ரஸ்கூட இல்லாதவர்கள் கவர்னரிடம் புகார் கொடுக்கிறார்கள்’ என்று கடுமையாக தாக்கிப் பேசினார். இதுவும் பத்திரிகைகளில் வெளியானது.

இதற்கு அடுத்த சில நாட்களில், மேலூரில் ஒரு கட்சிக் கூட்டத்தில் காமராஜர் கலந்துகொண்டார். 'நெடுமாறனின் அட்ரஸை சிலர் கேட்கிறார்கள். சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள். பழ.நெடுமாறன், எம்.ஏ. பட்டதாரி. குறிஞ்சி பத்திரிகை ஆசிரியர். மதுரையில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர், நாளை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அதில் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவர்’ என்று காமராஜர் சொன்னபோது, மேடையில் இருந்த அத்தனை பேரும் அதிர்ந்துவிட்டார்கள்.
ஏனெனில், காமராஜர் யாரிடமும், 'நீதான் அமைச்சர்’ என்று எதுவும் சொல்ல மாட்டார். அவரே அப்படிச் சொல்லும் அளவுக்கு அரசியல் வாழ்க்கை நடத்தியவர் அய்யா பழ நெடுமாறன் .

திமுக இந்திரகாந்தி மீது தாக்குதல் நடத்திய போது தான் கல்லடிகளை தாங்கி கொண்டு இந்திராவின் உயிரை காத்தவர் . அவர் நினைத்திருந்தால் இதை சொல்லியே காலம் முழுவதும் மத்திய அமைச்சராக இருந்திருக்கலாம் . அனால் தமிழ் இனபற்றின் காரணமாக இன்றுவரை போராளியாக வாழ்கிறார்

தலைவர்கள் மட்டுமில்லை, மக்களும்....


அது ஒரு கனாக் காலம் ... தலைவர்கள் .மட்டுமில்லை .. 


                                  

மக்களும் நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்தக் காலம் அது .... காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . 

அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ... 

அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ... 

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...." 

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் . 

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... 

வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்

( நன்றி மாலை மலர் சிறப்பு இணைப்பிற்கு ) .
 

Like ME

Sample Text

Sample Text