
2500 ஆண்டுகளுக்கு முந்தைய கொடுமணல் வணிக நகரம்
தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சமீபத்திய கண்டுபிடிப்பு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள் கொடுமணல் கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வணிக பெருநகரமாக இருந்துள்ளது என்பதாகும்..
புதுச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைக் குழுவினர் கடந்த 2 மாதங்களாக கொடுமணல் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அகழாய்வு மூலம் மட்பாண்டங்கள், கற்கருவிகள், கூர்மையான பழங்கால ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொல்பொருள் ஆய்வாளர்கள், "தமிழ்-பிராமி எழுத்துக்கள் அந்த மட் பாண்டங்களில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக - தமிழ் பிராமி எழுத்துக்களான - அதிந்தை, மதந்தை, குவிரன், சுமனன், சாம்பன், விந்தைவேல், பாணன், பாகன், யாடன் - ஆகியவைகள் பொறிக்கப்பட்டுள்ளன' என்று அறிவித்துள்ளனர். .
இதன் மூலம், கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களை வாங்க உத்திர பிரதேச மாநிலத்தின் மத்திய கங்கை சமவெளிப் பகுதியில் இருந்து வணிகர்களும், கைவினைஞர்களும் இங்கு வந்துள்ளதை மேலே குறிப்பிட்ட தமிழ் - பிராகிருத மொழி கலந்த ஆட் பெயர்களும், வணிகர் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.
கல்மணிகள் செய்யும் தொழிற்கூடங்கள், செம்பு - இரும்பு தொழிற்கூடங்கள் மற்றும் நெசவுத் தொழில்களும் அங்கு அந்தக் காலத்திலேயே உருவாக்கப்பட்டு சிறந்த ஒரு தொழில் நகரமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment