
"" தமிழா - ஒரு மாதத்தில் ஏன் மறந்துவிட்டாய் ஈழத்தை...""
--------------------------
கடந்தகால ஈழத்தின் ஈர வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தமிழ் மக்களுக்கு சிங்கள தேசம் எப்போதும் பலிபீடமாக இருத்ததே தவிர, ஒரு போதும் பாதுகாப்புக் கூடமாக இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை.
ஈழப் பிரச்சனை மூன்று கட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. முதலாவது கட்டம் (1956-1984) ஒன்றுபட்ட இலங்கையில்., சிறுபான்மைத் தமிழ் மக்கள், தங்களுக்கும் சிங்கள மக்களுக்கு இணையாக சம அந்தஸ்து, சம வாய்ப்பு, சம உரிமை கேட்டு செல்வநாயகம் (செல்வா) தலைமையில் நடந்த அறவழிப் போராட்டம்.
இரண்டாவது கட்டம் (1985-2009) தனி ஈழமே தீர்வு என வட்டுக்கோட்டை தீர்மானத்தை (1976-மே 14) அறவழி தோற்றுப் போனதால், காந்தியவாதிகள்தான் நிறைவேற்றினார்கள். அதைப் பின்பற்றி ஈழ இளைஞர்கள், ஆயுதம் தாங்கி களமாடி, போராளிகளாக பரிணாமம் பெற்ற ஆயுதப் போராட்டக் காலம் அது.
மூன்றாவது கட்டம் (2008-க்கு பிறகு) நாசிச ஹிட்லருக்கும் தோன்றாத, விஞ்ஞானப் பூர்வமான இன அழிப்புக் கொள்கையும், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தை இழிவு செய்யும் உள்நோக்கம் கொண்ட யுத்த நடவடிக்கைகளும், மகிந்த ராசபட்சேவின் கொடிய அணுகுமுறைகளாகும். சமீபத்தில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மேரி கால்வின், ஈழக் களத்தில் தான் கண்ட போர்க்குற்ற காட்சிகளைக் குறிப்பிடுகிறார். “ஈழப் போரின் உச்சக்கட்டத்தில் சரணடைய வந்த அரசியல் பிரிவு தலைவரும், மிகப்பெரும் புத்தி ஜீவியுமான நடேசன் உள்ளிட்டோரை, வெள்ளைக் கொடி பிடித்து வந்தவர்களை காட்டு மிராண்டித்தனமாக சுட்டுக்கொன்று சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயத்தைக் காலில் போட்டு மிதித்தது சிங்கள பயங்கரவாதம்’
மனித குலத்திற்கு எதிரான போரை இராசபட்சே நடத்தியதாக ஐ.நா. அறிக்கையே ஏற்றுக் கொண்டது. இதன் விளைவு மனித குல விரோதி இராசபட்சேவிற்கு எதிராக சர்வதேச தமிழினமும் முற்போக்கு சிந்தனையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மனிதநேயம் கொண்டோரும் மத, இன, தேச எல்லைகளைக் கடந்து களமிறங்கி இருக்கிறார்கள். காட்சிகள் மாறுகின்றன.
இலங்கையின் இனப் பிரச்சனையில் முதல் அதிபர் டட்லி சேன நாயக முதல், மகிந்த இராசபட்சே வரை இன அழிப்பு என்ற ஒரே நோர்க்கோட்டில் சிந்திப்பவர்கள்தான், “எதிர்காலத்தில் இலங்கையில் இரண்டு இனம்தான் இருக்கும். ஒன்று சுத்தமான சிங்கள இனம், மற்றொன்று சிங்கள தமிழ்க் கலப்பினம், தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுவார்கள் தமிழ் பெண்கள், சிங்கள இராணுவத்திற்கு பாலியல் சேவைக்கும் அனுப்பப்படுவார்கள்“ என்ற இனவெறி பரப்புரைகள், இலங்கைத் தீவைக் சிங்களமயமாக்கும். அடிப்படைக் கட்டுமானங்களாக சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி, பௌத்தம் அரச மதம் என்ற வகையில் அரசியலமைப்பு திருத்தப்படும். வடக்கு கிழக்கு இணைப்பு மறுப்பு 1981 யாழ் நூலக எரிப்பு, குட்டிமணி ஜெகனின் விழிகளை பிடுங்கி எறிந்த வெளிக்கடை சிறைச்சாலை படுக்கொலை 1983-ல் ஜெயவர்த்தனே முன்னின்று நடத்திய இனப்படுகொலை. கூட்டாட்சி முறைக்கு மறுப்பு என்று சட்டத்தையும், அரசு எந்திரத்தையும் இனவெறிக்கு ஆதரவாக திருப்பியதன் விளைவு அரச பயங்கரவாதமாக இன்று உருவெடுத்துவிட்டது. அதன் கொடுமையான பாதிப்புதான் 25 லட்சம் தமிழ் மக்களை நேரடியாவும், மறைமுகமாகவும் இல்லாமல் செய்திருக்கிறது இலங்கை அரசு.
ஈழப் பிரச்சனையில் இன்றுகூட இது நிஜம்தான், “யாதும் ஊரெ யாவரும் கேளீர்” என்றவனுக்கு இன்று உதவுவதற்கு ஒரு நாடும் இல்லை. உறவுக்கு ஒரு நாதியும் இல்லை. பூகோள ரீதியாக மட்டுமல்ல. சமூக ரீதியிலும் தனித்துவிடப்பட்ட தீவாக இருக்கிறான் ஈழத்தமிழன்.என்றாலே காந்தி தேசத்திற்குக் கசக்கிறது.
“உண்மையில் மனித குலத்தின் பேரவலம என்பது ஒரு சில கொடுங்கோலர்களின் கொடுஞ்செயல்கள் அல்ல: அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களின் மௌனம்”தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
No comments:
Post a Comment