நன்றி Sasi Dharan
திரும்பும் இடமெல்லாம் சிற்பங்கள் நிறைந்த வரதராஜ பெருமாள் கோயில், புதுச்சேரி அருகே இருக்கும் திருபுவனை என்னும் ஊரில் உள்ளது. இது கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் "பராந்தக சோழன்" காலத்தில் கட்டப்பட்டதாகும். தமிழகத்தில் 1000 ஆண்டுகள் கடந்த கோவில்களி
ல் இதுவும் ஒன்றும்.தொல்லில்யல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலில் சில அறிய வரலாற்றுத் தகவல்கள் நமக்கு கிடக்கின்றன.
முதலாம் ராஜேந்திர சோழன் ஆறாவது ஆட்சியாண்டில், கி பி 1018 ஆண்டு, இந்த வரதராஜ பெருமாள் கோயிலில் ஊராளும் பேரவை கூடியது வீரநாராயண விண்ணகர ஆழ்வார்கோயில் முற்றத்தில் அவர்கள் கூடினர் .இக்கூட்டத்தில் ஏரி நீர் பாயும் அனைத்து நிலங்களுக்கும் வரி விதிப்பது எனமுடிவு எடுக்கப்பட்டது . ஆதாரம் ARE 192 OF 1919

கல்வெட்டு
".............வரகு விளைந்த நிலத்தால் அருமாவாற் கலவரகு ஏரி
ஆயமாவதாகவும் , அருமாவாற் கலநெல்லு கொண்டு மதுராந்தகப பேரேரிக்கே ஏரி
ஆயமாகக் கொள்வதாகவும் "
என்று வரகு விளையும் நிலங்களுக்கும் நெல்லுக்கு போலவே' நாலாயிரவன்' என்னும் மரக்காலால் ஒரு கலம் ஏரி ஆயம் வசூலிப்பது எனத தீர்மானித்ததை தெரிவிக்கிறது .
தமிழர்களின் வரகு தானியப் பயன்பாடு ஆயிரம் ஆண்டு வரலாற்றுத் தொடர்புடையது என்பதை இந்த கோயில் கல்வெட்டு மூலம் ஒரு சான்றாக கிடைகின்றது.

No comments:
Post a Comment