
விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் என்ற கிராமத்தில் சுமார் 900 வருடங்களுக்கு முன் ராஜேந்திர சோழன் காலத்தில் கல்லூரி ஒன்று இயங்கி வந்தது, கைபடும்,கால்படும் இடம் என்ற ஒரு இடம் கூட இடைவெளி இல்லாமல் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படும் இந்த இடத்தில் இருநூற்று எழுபது பட்டபடிப்பு மாணவர்களும், எழுபது பட்டமேற்படிப்பு மாணவர்களும், அவர்களுக்கு கல்வி சொல்லித் தர தகுதி வாய்ந்த பனிரெண்டு ஆசிரியர்களும் இருந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் பத்தாயிரத்து ஐநூற்று ஆறு களம் நெல் மற்றும் அறுபத்தொன்றரைக் கழஞ்சுப் பொன்னும் செலவிடப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியின் நிர்வாகத்தை அரசோ,பல்கலைக் கழகமோ,நகராட்சியோ மேற்கொள்ளவில்லை.ஒரு கிராம சபையே மிக ஒழுங்குடன் இதை பராமரித்து வந்துள்ளது.ஆண்டு தோறும் இந்த செலவை ஈடுகட்ட வாய்பாக வருடம் தோறும் இந்த வருவாயை தரவல்ல 45 வேலி நிலத்தை இந்த கிராம சபையினர் இக்கல்லூரியை நடத்தி வந்த கோயிலுக்கு கொடையளித்தனர்.இன்றைக்கு வங்கிக்கணக்கில் வைப்பு நிதி பெறுவது போல், இந்த நிலம் வைப்பு நிதியாகக் கொல்லப்பட்டு, இந்த நிலத்தில் விளையும் விளைச்சல் கல்லூரிச் செலவுகளை ஈடுகட்டும் வட்டியாக பெறப்பட்டுள்ளது!. எல்லா கோவில்களை போல் இதுவும் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்ததை, தற்போது மதிய தொல்லியல் துறை பராமரித்து வருகின்றது.




No comments:
Post a Comment