Saturday, August 31, 2013

ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி





இந்தக் கட்டுரை கடந்த மாதம் உயிர்மையில் வெளிவந்தது. 



கடந்து வந்த மனித வரலாற்றில், எத்தனையோ நாகரீகங்கள் தோன்றியிருக்கின்றன. எத்தனையோ வல்லரசுகள் தோன்றியிருக்கின்றன. நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில், எண்ணிக்கையில் அதிகமான நாடுகள் இருந்திருக்கின்றன. கலாசாரங்கள், சமுதாயங்கள், ஆட்சிகள், கூட்டாட்சிகள் என இலட்சக்கணக்கானவை இதுவரை காலமும் இருந்திருக்கின்றன. அவை இருந்ததை வரலாறு பதிவும் செய்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் இப்போ எங்கே என்று தெரியாமல் அழிந்துவிட்டன. எகிப்தின் பிரமிட்டாகவோ, ரோமின் கொலோசியமாகவோ, சீனாவின் பெருஞ்சுவராகவோ, பெருவின் மச்சுபிச்சுவாகவோ, அங்கொன்றும் இங்கொன்றுமாக மிச்சமாக விடப்பட்ட ஓரிரு அடையாளங்கள் பூமியில் காட்சி தந்தாலும், அவற்றுடன் சேர்ந்து கட்டப்பட்ட கட்டடங்கள் எல்லாமே, மண்ணோடு மண்ணாக ஒன்றுமேயில்லாமல் அழிந்துவிட்டன. உதாரணமாக, பிரமிட்டுகள் கட்டப்பட்ட போது, எகிப்தில் மாபெரும் சாம்ராஜ்யமே இருந்திருக்கிறது. 'பாரோ' (Pharoah) மன்னர்களின் வாழிடம் முதல், மக்களின் வாழிடம் வரை எத்தனையோ கட்டடங்களும், அரண்மனைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் எஞ்சியிருப்பவை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய பிரமிட்டுகளும், சில ஆலயங்களும்தான். ஏனைய அனைத்துமே மறைந்துவிட்டன. எகிப்தும், ரோமும், சீனாவும் சில உதாரணங்கள்தான். ஆனால் உலகம் முழுவதும் பார்த்தால், சரித்திரங்களைச் சொல்லிய எத்தனையோ அடையாளங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால், ராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெருங்கோவில் மட்டுமிருக்க, அவன் வாழ்ந்த அரண்மனையிலிருந்து, கோட்டை கொத்தளங்கள் எவையும் முழுமையாக எங்குமில்லை.

'காலம்'தான், இவையெல்லாம் நம்முன்னே இல்லாமல் மண்ணோடு மண்ணாகி மறைந்து போனதற்கான முக்கியமான காரணம். கடந்து செல்லும் 'காலம்', மெல்லமெல்லச் சுவடுகளை அழித்துச் செல்லும் கடலலை போன்றது. எதையுமே அது முழுமையாக விட்டு வைப்பதில்லை. சில நூறு ஆண்டுகளிலேயே இருப்பவற்றை சுத்தமாய் அழித்துவிடும் தண்மையுள்ள காலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளென்றால், அடியோடு அடையாளம் தெரியாமலாக்கிவிடும். நான் மேலே சொன்ன பிரமிட்டுகளும், கொலோசியமும், சீனப்பெருஞ்சுவரும் கூட, அதிகப்படியாக ஆறாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டவைதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவையென்று, பூமியின் எந்த மூலையிலும், எதுவும் முழுமையானதாக இல்லை. அப்படி அவற்றைத் தேட வேண்டுமென்றால், பூமிக்கு அடியில் புதைபொருள் ஆராய்ச்சி மூலம் தோண்டியெடுத்தால்தான் உண்டு. அதுவும் உடைந்து சிதறிய சிதிலங்களாகத்தான் கிடைக்கும். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கட்டடங்கள் மட்டுமில்லை. அதற்கு முன்னர் இருந்த மொழிகள் கூடப் பூமியில் இப்போதில்லை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் மொழி, இனம், கலாச்சாரம், அடையாளம், வாழ்விடம் அனைத்துமே எப்படி இருந்தன என்று, ஒரு கோட்பாட்டு ரீதியிலான கற்பனையாகவே நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும். இதே பத்தாயிரம் ஆண்டுகளை, இருபதாயிரம் ஆண்டுகளாகவோ, முப்பதாயிரம் ஆண்டுகளாகவோ எடுத்துக் கொண்டால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும். மனித இனத்தின் வடிவங்களில், தோற்றங்களில் கூட மாற்றங்களைக் கொண்டுவந்துவிடும். அதுவே ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றால்........? கற்பனை பண்ணிப் பாருங்கள்? ஒரு இலட்சம் ஆண்டுகளுக்குப் முன்னர் வாழ்ந்த மனிதர்களால், அவர்களுக்குப் பின்னர் வந்த சந்ததியினரான நமக்கு, எதையாவது அடையாளமாக விட்டுச் செல்ல முடிந்ததா? அதற்குச் சாத்தியங்கள்தான் உண்டா? முடியவே முடியாதல்லவா?

"அதெல்லாம் சரிதான். இதையெல்லாம் ஏன் இங்கு எங்களுக்குச் சொல்கிறீர்கள்?" என்றுதானே யோசிக்கிறீர்கள். உண்மைதான்! விசயமில்லாமல் நான் இவற்றையெல்லாம் உங்களுக்குச் சொல்லவில்லை. இத்துடன் சேர்த்து, இன்னுமொரு விசயத்தையும் சொல்லிவிட்டு, இவற்றைச் ஏன் இங்கு நான் சொன்னேன் என்பதை விளக்குகிறேன்.

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் அதிசயமாகவும், உபயோகமானகவும் இருந்த ஒரு கண்டுபிடிப்பு 'பிளாஸ்டிக்' (Plastic) ஆகும். ஆரம்பத்தில் பிளாஸ்டிக்கைத் தலையில் வைத்துக் கொண்டாடிய நாம், "பிளாஸ்டிக் பொருட்களைப் பாவனை செய்வதைத் தவிர்ப்போம்" என்று இப்போ கூக்குரல் எழுப்புகிறோம். பிளாஸ்டிக்குக்கு எதிரான மிகமுக்கியமாக ஒரு காரணத்தையும் சொல்கிறோம். 'மண்ணில் புதையும் பிளாஸ்டிக்குகள் கால ஓட்டத்தால் மண்ணோடு மண்ணாக மக்கிவிடாமல் அப்படியே இருப்பதால், நமது பூமித்தாய் மாசடைகிறாள். அதனால் மண்ணின் வளம் நாசமாகிவிடும். நமக்குப் பின்னர் வரும் நம் சந்ததியினர்களுக்கு நாம் செய்யும் துரோகம் அது' என்பதுதான் அந்தக் காரணம். அதாவது, நாம் இப்போ நிலத்தில் தூக்கி வீசும் பிளாஸ்டிக்கினால், நமது பிற்காலச் சந்ததியினரின் வாழ்வாதாரம் குலைந்துவிடும் என்ற கவலையில், நன்கு பயனளிக்கக் கூடிய பிளாஸ்டிக்கையே வேண்டாம் என்று தவிர்க்கப் பார்க்கிறோம். நமது எதிர்காலச் சந்ததியினர்களைப் பற்றிக் கவலைப்படும் நல்லவர்கள் அல்லவா நாம். கேட்கும் போது மிகவும் நன்றாகவே இருக்கிறது. ஆனால், உண்மையாகவே நம் எதிர்காலச் சந்ததியினர்கள் பற்றி நாம் கவலைப்படுபவர்கள்தானா? அந்த நல்ல பண்பு நமக்கு இருக்கிறதா? "நிச்சயமாக இருக்கிறது" என்று உங்களில் எவராவது சொல்வீர்கள் என்றால், 'ஒன்கலோ' (Onkalo) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் நபர் நீங்கள்தான். "அடுத்த சந்ததிகள் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை. நான் நன்றாக வாழ்ந்தால் மட்டும் எனக்குப் போதும்" என்று நீங்கள் நினைப்பவரென்றால், ஒன்கலோ பற்றியல்ல, எதைப் பற்றிச் சொன்னாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஆனாலும், 'இப்படி எல்லாம் இருக்கின்றனவா?' என்று அறிந்து கொள்ளவாவது தொடர்ந்து படித்துப் பாருங்கள்.



மீண்டும் இலட்சம் ஆண்டுகளுக்கு மனித வரலாற்றில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி நாம் பேசியதற்கான காரணங்களைப் பார்க்கலாம். இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் மூதாதையர்களின் அடையாளங்கள் எதுவுமே பூமியில் இப்போது முழுமையாக இல்லை. கிடைத்தவை எல்லாமே மண்ணில் புதைந்திருந்த பாஸில் (Fossil) வகை எச்சங்கள்தான். இது இப்படியிருக்க, இனி வரப்போகும் எதிர்காலத்தைப் பாருங்கள். இன்றிருக்கும் நமது அடையாளங்களில் ஒன்றாவது, இன்னும் பத்தாயிரம் வருடங்களின் பின்னர் அப்படியே இருக்குமா என்பதை யோசியுங்கள். இனி வரப்போகும் பத்தாயிரம் ஆண்டுகளில் பூமியிலும், மனிதனிலும் எத்தனை மாற்றங்கள் வரலாம் சொல்லுங்கள்? எத்தனையோ யுத்தங்கள் ஏற்படலாம். இப்போதிருக்கும் நகரங்கள் அனைத்துமே அழிந்து போகலாம். கடந்த ஒரு நூற்றாண்டிலேயே இரண்டு உலக யுத்தத்தைக் கண்டவர்கள் நாம். இன்னும் பத்தாயிரம் ஆண்டுகளில் எத்தனை எத்தனை உலக யுத்தங்களைச் சந்திக்கப்போகிறோமோ யாருக்குத் தெரியும்? ஒட்டுமொத்த உலகையே, பல ஆயிரம் தடவைகள் அழிக்கும் அளவுக்கு அணு ஆயுதங்களைக் கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறோம். 'ம்' என்றால் பட்டனைத் தட்டிவிடுவோம் என்று பயங்காட்டும் சூழ்நிலையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிலத்தில் இருந்து அணுகுண்டுகளைச் செலுத்துவதோடு இல்லாமல், விண்வெளியில் செயற்கைக் கோள்களில் அணுகுண்டுகளை அடுக்கி வைத்துப் பயமுறுத்தும் தந்திரங்களையும் ஆரம்பித்துவிட்டோம். இன்னும் சில ஆண்டுகளில் ஒட்டுமொத்தப் பூமியும் அணு யுத்தத்தால் அழிந்துவிடும் என்ற நிலை இப்பொழுதே உருவாகிவிட்டது. அப்படியென்றால், பத்தாயிரம் ஆண்டுகளின் பின்னர் இருக்கப் போகும் நிலையை யோசித்துப் பாருங்கள்? யுத்தங்கள் நடைபெற்று, அதில் எஞ்சிய ஒரு இனம் மீண்டும் துளிர்த்து, புதியதொரு மனித சமுதாயமாக உருவாகக் கூடிய சாத்தியங்களும் நிறையவே உண்டு. இன்றிருக்கும் அமெரிக்காவோ, ரஷ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ நாளை இருக்காது. பத்தாயிரம் ஆண்டுகளின் பின்னர் வாழும் மனிதன், என்ன பெயரில் உள்ள நாட்டில், எப்படி வாழ்வானோ? அவன் என்ன மொழி பேசுவானோ? எதுவுமே தெரியாது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கே இப்படியென்றால், இனிமேல் வரப்போகும் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர் வாழப்போகும் மனிதன் பற்றி என்ன தெரியும் நமக்கு? அவன் நம்மைப் போல உருவில் இருப்பானா என்று தெரியாது. என்ன மொழி பேசுவான் என்றும் தெரியாது. ஆங்கிலம், ஜேர்மன், தமிழ் போன்ற மொழிகள் மட்டுமில்லை, பூமியில் இருக்கும் எந்த மொழியும் அப்போது வழக்கில் இருக்கவே இருக்காது.

ஒரு இலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர் வாழப்போகும் மனிதன், நமது வருங்காலச் சந்ததியினன் என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். அது தவிர்ந்த அவனைப் பற்றிய எந்த நிலைப்பாட்டையும் நம்மால் இப்போ கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது. எதிர்கால மனிதன், அறிவியலில் வளர்ந்து, பிரபஞ்சம் முழுவதும் ராக்கெட்டுகளின் மூலம் பயணம் செய்யும் ஒரு அதிபுத்திசாலியானவனாக இருப்பான் என்றே நாம் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் யாருக்குத் தெரியும், நடக்கப் போகும் அணு யுத்தங்களினால் அழிந்து போய், அறிவியல் என்பதே அற்றுப் போய், பூச்சியதிலிருந்து ஆரம்பிக்கும் கற்கால மனிதன் போலக் கூட அவன் இருக்கலாம். அணுக்கதிர் வீச்சுகளால், பூமியின் மேற்பரப்பில் வாழமுடியாமல், நிலத்துக்குக் கீழே வாழும் குகை மனிதனாகக் கூட இருக்கலாம். இந்தச் சாத்தியங்களையெல்லாம் நாம் நன்கு புரிந்து கொண்டோமானால், 'ஒன்கலோ' பற்றித் தெரிந்து கொள்ள முழுமையாகத் தகுதி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமாகும். இனிமேல் 'ஒன்கலோ' என்றால் என்னவென்று நாம் பார்க்கலாம்.


'ஒன்கலோ' (Onkalo) என்பது பின்லாந்து (Finland) மொழியில் உள்ள ஒரு சொல்லாகும். இதன் அர்த்தம் குகை, குழி, மறைக்கப்பட்டது என்பதாகும். உலகிலேயே முதன்முதலாக, மிகமோசமான முன்னுதாரணமாக, பின்லாந்து நாட்டில் இந்த 'ஒன்கலோ' அமைக்கப்படுகிறது. நிலத்துக்கு 420 மீட்டர்கள் கீழே, கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர்கள் நீளமான சுரங்கம்தான் இந்த 'ஒன்கலோ'. 'இவ்வளவு ஆழத்திலும், நீளத்திலும் சுரங்கம் கிண்டி, நிலக்கரியையோ, பெற்றோலையோ, தங்கத்தையோ எடுக்கப் போகிறார்கள்' என்றா நினைக்கிறீர்கள்? இல்லை இந்தச் சுரங்கத்தை வெட்டி அதிலிருந்து எதையும் எடுக்கப் போவதில்லை. அதற்கு மாறாக அங்கே எதையோ அடுக்கி வைக்கப் போகிறார்கள். புதைக்கப் போகிறார்கள். எதைப் புதைக்கப் போகிறார்கள் தெரியுமா? பின்லாந்து நாட்டில், அமைக்கப்பட்டிருக்கும் ஏழு அணு உலைகளினாலும் வெளிவந்த அணுக்கழிவுகளை இந்த ஒன்கலோவில் புதைத்து வைக்கப் போகிறது பின்லாந்து அரசு. 420 மீட்டர்கள் ஆழத்தில் வரிசையாகக் குழாய் போன்ற அமைப்பில் குழிகள் தோண்டி, அதனுள் அணுக்கழிவுகளை இட்டு, மேலும் கீழும் காங்கிரீட் நிரப்பி பாதுகாக்கப் போகிறது பின்லாந்து. எவ்வளவு காலத்துக்குப் பாதுகாக்கப் போகிறது தெரியுமா? ஒரு இலட்சம் வருடங்களுக்கு.


இப்போது வாழும் மனித இனத்துக்கு இந்தப் பாதுகாப்புப் போதுமானதுதான். சொல்லப் போனால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குக் கூடப் போதுமானதுதான். ஆனால் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு இவை பாதுகாப்பானவையா? மேலே நான் சொன்னவற்றை இப்போது மீண்டும் யோசித்துப் பாருங்கள்? எவ்வளவு முட்டாள்தனமான ஒரு திட்டம் இது. பத்தாயிரம் ஆண்டுகளிலே எல்லாமே அழிந்து போய்விடும் நிலை இருக்கும் போது, ஒரு இலட்சம் ஆண்டுகள் வரை பாதுகாப்பதற்குத் திட்டம் போடுவதில் உள்ள முட்டாள்தனம் புரிகிறதா? எல்லாமே தடயமில்லாமல் அழிந்த நிலையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் நம் சந்ததி மனிதன், ஏதோ ஒரு காரணத்துக்காக நிலத்தை தோண்டும் போது, இந்தக் கட்டடங்கள் தென்பட்டால், 'அட! நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஏதோ ஒரு கட்டடம் என்று நினைத்து, உடைத்துப் பார்ப்பான் அல்லவா? அப்போது அவன் நிலை என்ன? அப்படித்தானே நாம் நிலத்துக்குக் கீழே உள்ள கட்டடங்களையும், பாஸில்களையும் இப்போது கிண்டி ஆராய்கிறோம். அதுபோல, ஏதோ ஒரு விதத்தில் தப்பிப் பிழைத்து வாழும் நம் சந்ததி மனிதனும் இந்தக் கட்டடங்களைத் தோண்டிப் பார்ப்பான். அப்போது அவனை அடியோடு இந்த அணுக்கழிவுகள் அழித்து விடுமல்லவா? கண்ணுக்குத் தெரியாத, மூக்கினால் நுகர முடியாத, வாயினால் ருசி அறியமுடியாத, உடலினால் உணர முடியாத கொடிய விசமல்லவா அது. இப்போது நீங்கள், "ஒரு இலட்சம் ஆண்டுகளாகவா அது ஆபத்தாக இருக்கப் போகிறது? சில ஆயிரம் ஆண்டுகள் ஆபத்து இருக்கலாம். அதை இவர்கள் பெரிதாக்கி, ஒரு இலட்சம் ஆண்டுகள் என்கிறார்கள். அவ்வளவு ஆண்டுகளுக்கு ஆபத்தாகவா இருக்கப் போகின்றன இந்த அணுக்கழிவுகள்?" என்று நினைக்கலாம். ஆனால், அணு உலைகளில் பயன்படுத்தப்படும், 'அதியுயர் கதிர்வீச்சு மூலகங்களின் கழிவுகள்' (High level radioactive waste) தங்கள் சக்தியை இழப்பதற்கு ஒரு இலட்சம் ஆண்டுகள் தேவை என்பதுதான் இங்கு வேதனையான உண்மை.

அணு உலைகளில் மின்சாரம் பெற்றுக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் அணுக்கதிர் மூலகங்களைச் சிறிய குழாய்களின் அமைப்பில் தண்டுகள் (Fuel Rods) போல உருவாக்கி, அவற்றில் பலவற்றை ஒன்று சேர்த்து பெரியதொரு குழாயாக அமைத்திருப்பார்கள். இதனுள்ளேயே நியூட்ரானின் மோதலுக்கு உள்ளாக்கப்பட்டு, சன்கிலித் தொடர்ச்சியாக அணு மோதல்கள் ஏற்பட்டு, அதனால் பெறப்படும் வெப்பத்தினால் மின்சாரம் பெறப்படுகின்றது. இதன் மூலம் எஞ்சும் கழிவுப் பொருளும் ஒரு அணுக்கதிர் மூலகமாகவே மாற்றப்பட்டிருக்கும். அவை மிக மோசமாக அணுகதிரை வெளியிடுபவையாக இருக்கும். இவற்றின் வீரியத்தைக் குறைப்பதற்கு, போரிக் அமிலம் (Boric acid) கொண்ட குளிர்ந்த திரவத்தில் தண்டுகள் முழுமையாக அமிழ்த்தப்பட்டு, அணு உலை இருக்குமிடத்திலேயே பல மாதங்களாகப் பாதுகாக்கப்படும். பின்னர், அங்கிருந்து அகற்றப்பட்டு 'ஒன்கலோ' போன்ற ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்படும். ஒரு இலட்சம் ஆண்டுகள் என்றதும் வியப்பில் ஆழ்ந்து போகும் நீங்கள், சில அணுக்கதிர் மூலகங்களின் அரைவாழ்வு காலத்தை அறிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு அணுக்கதிர் மூலகத்தின் 'அரைவாழ்வு காலம்' (Half life) என்றால் என்னவென்று பார்க்கலாம். 'அணுக்கதிர் மூலகம் ஒன்று, அணுக்கதிரை வெளியே விடுவதால் சிதைவடைகிறது. அப்படிச் சிதைவடைவதால் அது தன் எடையை இழக்கிறது. ஒரு குறித்த எடையுள்ள அணுக்கதிர் மூலகம் ஒன்று, அணுக்கதிர்களை வெளியிட்டுச் சிதைவடைந்து, அதன் எடையின் அரைவாசிக்கு மாற எவ்வளவு காலம் எடுக்கிறதோ, அது அந்த அணுக்கதிர் மூலகத்தின் 'அரை வாழ்வு காலம்' என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, ஒரு கிலோ அணுக்கதிர் மூலகம், அணுக்கதிர்வீச்சினால் சிதைவடைந்து அரைக்கிலோவாக மாறத் தேவையான காலம். இதன்படி 'புளுட்டோனியம் 239' மூலகத்தின் அரவாழ்வு காலம் எண்பதாயிரம் (80,000) வருடங்களாகும். இது போல, 'யூரேனியம் 233' மூலகத்தின் அரை வாழ்வு காலம், 159,000 வருடங்களும், 'யூரேனியம் 235' மூலகத்தின் அரை வாழ்வு காலம், 704 மில்லியன் வருடங்களுமாக இருக்கின்றன. அதன் அர்த்தம் அத்தனை ஆண்டுகளுக்கு அந்த மூலகங்கள் அணுக்கதிர்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். இப்போது புரிகிறதா, ஏன் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு இந்த திட்டம் தீட்டப்பட்டதென்று? இப்படி ஒரு இலட்சம் வருடங்களுக்குப் பாதுகாப்பதாகச் சொல்லப்படும் இந்தத் திட்டம் முடிவடைய நமது மூவாயிரமாவது சந்ததியினன் உயிருடன் இருப்பான். மூன்றாவது சந்ததியின் பெயரையே சரிவரத் தெரிந்து கொள்ளாத மக்கள் நாம். மூவாயிரமாவது சந்ததிகள் பற்றி எதுவுமே தெரியாமல் இப்படித் திட்டமிடுகிறோம்?

பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சிங்கியிலிருந்து (Helsinki) இருநூறு கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் 'ஒய்ரோஓக்கி' (Eurajoki) என்னுமிடத்திலேயே இந்த 'ஒன்கலோ' அமைக்கப்பட்டிருக்கிறது. பின்லாந்து நாடு வெளிப்படையாகச் செய்யும் இந்தச் செயலை அமெரிக்கா, சுவிஸ், பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், கனடா, பெல்ஜியம் போன்ற நாடுகளும் செய்வதற்காக சுரங்கங்களை அமைத்தன. ஆனால், புக்கிஷிமாவின் நடந்த அணு உலைப் பயங்கரத்தினால், பின்லாந்து தவிர்ந்த ஏனைய நாடுகள் திட்டங்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டுள்ளன. அதுவும் மக்களின் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில். உலகம் பூராவும் இதுவரை இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் (250,000) தொன்கள் அணுக்கழிவு சேர்ந்து போயிருக்கின்றன. அவற்றை எங்கே எப்படிப் பாதுகாப்பது என்று தெரியாமல் முழி பிதுங்கிப் போய் இருக்கின்றனர். 'ஒன்கலோ' போலப் புதைக்கப்படாமல் இருந்தால், தினமும் மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிந்து கொண்டே இருக்கும். 'அட! அதற்காக பின்லாந்து நாடு, 'ஒன்கொலோ' அமைப்பதற்காக செலவழிக்கும் தொகை சாதாரணமானதென்று நினைத்துவிட வேண்டாம். மொத்தமாக 818 மில்லியன் யூரோக்களைப் பின்லாந்து செலவிடுகின்றது. ஒவ்வொரு நாடும் இப்படிப் புதைக்காமல் அணுகதிர்க் கழிவுகளைப் பாதுகாப்பதென்றால், இதைவிட அதிக பணத்தைச் செலவிட வேண்டும்.


அணுஉலை என்பது தடையில்லா மின்சாரத்தையும், கரியினால் ஏற்படும் சூழல் மாசற்ற மின்சாரத்தையும் தருகிறது என்பது உண்மைதான். ஆரம்பத்தில் அது இலாபகரமானதாகவே தோன்றும். ஆனால் அணுக்கழிவைக் கருத்தில் கொண்டால், அதன் பின்னர் ஏற்படப்போகும் செலவு என்பது நினைத்தே பார்க்க முடியாததாக மாறிவிடும். ஒவ்வொரு திட்டங்களும் மில்லியன் மில்லியன் கணக்கான டாலர்களை விழுங்குவதாகவே இருக்கும். இந்த மோசம் போகும் திட்டங்கள் மூலமும் ஒரு கூட்டம் பணம் பண்ணும் வித்தையை நடாத்திக் கொண்டிருக்கும்.
இப்படியோ, அப்படியோ அவர்களுக்கு மட்டும் பணம் போவது உறுதி. மக்கள் பொருளாதாரத்தினால் அடிபடுவதும் உறுதி.

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். 'அணு உலை ஒன்றின் மூலம், ஒரு நாடு ஒரு மணி நேரத்துக்குத் தேவையான மின்சாரத்தை உருவாக்கும் போது, அதே அளவு அணுக்கழிவையும் உருவாக்குகின்றது. ஒரு மணி நேரத்துக்குத் தேவையான மின்சாரம், அந்த ஒரு மணி நேரத்தில் செலவழிந்த பின் மாயமாகிவிடும். ஆனால் அதனால் உருவாக்கப்பட்ட அணுக்கழிவு, ஒரு இலட்சம் வருடங்களுக்கு நம்முடனும், நமது மூவாயிரம் சந்ததிகளுடனும் சேர்ந்தே வந்து கொண்டிருக்கும். அருகில் இருந்து வாயைப் பிளந்து, நம்மை விழுங்கப் பார்க்கும் அரக்கனாக, என்றாவது ஒரு நாள் அது நம்மை விழுங்கிவிடும்'

Sunday, August 25, 2013

வெற்றிலை

                



பழந்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. 

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது. 

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. 

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது. 

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள். 

வெற்றிலை மருத்துவம்

வெற்றிலை பயன்--சித்த மருத்துவம்

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர்தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி: 

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று 
தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி: 

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்: 

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்: 

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

-----------------------------------------------------

தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

தமிழர் ஆடற்கலைகள்..!

   

தமிழர் ஆடற்கலைகள்..!

தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது பரதநாட்டியம் தான்.

அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில் இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம் காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது.

படம் ;- தமிழர் ஆடற்கலைகளில் சிறப்பு மிக்க சில ஆடற்கலைகள்.

1) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும் நடனம்

2) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.

3) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.

4) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம்

5) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம்

6) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும்.

7) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம்.

 குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம்.

பழந்தமிழரின் அளவை முறைகள்.

                            

பழந்தமிழரின் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, August 24, 2013

' அரிக்கமேடு '



பெயரைப் படித்தால் மிகச் சாதாரணமாக தோன்றும் .
ஆனால் ,எத்தனை தேசம் போனாலும் கிடைக்காத பெருமை , பாரம்பரியம் இம்மண்ணுக்கு உள்ளதென்பதை உரக்கக் கூறும் ஒரு வரலாற்று பொக்கிஷம் .

 

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டனம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.

( ஆங்கிலத்தில் ARIKAMEDU ) அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது .

புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது

அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச் செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிறித்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியார் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.

1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்ச்சுக்கல்லுரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச் சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும்,சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வாளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிருத்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியர் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES)சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.

ரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரன்

      வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவனது உடலத்தின் புகைப்படமும் கிடைக்கப் பெற்றது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

குடும்பப் பின்னணி:-

வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி. பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.

சிறுவயது அனுபவங்கள்:-

பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.

ஆரம்பக் கல்வியும் போராட்ட ஈடுபாடும்:-

பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.

தபால்தலை வெளியீடு:-

பிரான்சில் உள்ள செயற்பாட்டாளர்கள் இவரது உருவப்படத்தைக் கொண்ட தபால்தலையை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சின் அஞ்சல் துறை அங்கீகாரம் அளித்துள்ளது. இத்துடன் தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலர், புலிக்கொடி ஆகியவற்றைக் கொண்ட தபால்தலை முத்திரைகளும் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பிரான்சிலுள்ள இலங்கை தூதரகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரி

சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் வயல்கள் அதிக அளவில் இருந்ததால், நிலத்தை (வயலை) உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் மற்றமடைந்ததாகத் தெரிகிறது.
                       

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம்
தற்போது கல்குளம், விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு, சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட (வேணாடு) திருவிதாங்கூர் மன்னர்கள் நாஞ்சில் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளை கைவசப்படுத்திக்கொண்டனர். வீர கேரள வர்மாவால் துவங்கப்பட்ட இக் கைப்பற்றுக் கொள்கை அவரின் பின்காமிகளால் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டு கி.பி. 1115 -ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது.

ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேணாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். இதன் விளைவாக, கன்னியாகுமரி, 1609- ஆம் ஆண்டு மதுரை, விஸ்வநாத நாயக்கரின் வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர் ரவி வர்மா, மார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேணாடு கடும் உள்நாட்டுக் குழப்பங்களைச் சந்தித்தது. இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டைத் தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றி கொண்ட போதிலும் சந்தா சாகிபுவை சமாளிக்க முடியாததால் போர்க்களத்தை விட்டுப் பின்வாங்க வேண்டியிருந்தது. 

மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டு வந்தனர்.
பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

தஞ்சைப் பெரியகோவிலில் ....

 
வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலுக்கு உண்டு, அந்த சிறப்பம்சங்கள் ...

* கோவிலில் உள்ள நந்தி சிலையானது முழுவதும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்...



* 1003 வருடங்கள் ஆனாலும் பழமை மாறாமல் இருப்பது இன்னொரு பெருமை. 

* ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டு, நாணயம், மற்றும் அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலை, ஆகியவற்றில் நம் பெரிய கோவில் உள்ளது, இவை மூன்றிலும் இடம் பெற்ற ஒரே கட்டிடம், தஞ்சை கோவில் மட்டுமே.

* இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

*** இக்கோவிலின் மிகப்பெரிய சிறப்பு, இக்கோவிலின் மேல் இடம்பெற்றுள்ள கோவில் கலசம், கீழே உள்ள சிவன் லிங்கத்திற்கு துல்லியமாக நேர்க்கோட்டில் அமைந்திருப்பது...

## இன்னும் நமக்கு தெரியாமல் எத்தனை ரகசியங்களை மறைத்து வைத்திருக்குறார் அந்த ராஜ ராஜ சோழன்...





கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இந்தக் காலத்தை மத்திய சோழர் காலம் என்றழைக்கலாம், இந்தக் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்கள் கட்டப்பட்டன.

சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த(Axial)மண்டபங்களும்விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.
முக்கிய விமானம் உத்தம வகையச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள்.

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.


பெரிய கோவில் அல்லது பிரகதீசுவரர் கோயில் என அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் இன்னொரு தோற்றம்.
கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.
சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.

இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

" இசைத் தூண்கள் "

                

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்கள.

கை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது !! அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும் !

இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் ! .இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். 

இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. 

"In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது !!. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை ,ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை ! இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! 

அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும்,கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம் !



"மகேந்திர பர்வதம்'


கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
                   
லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது.

இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.

எனினும், அங்குள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட அடர்ந்த காடு, வேகமாகப் பாய்ந்தோடும் காட்டாறு, சதுப்பு நிலம் போன்றவை காரணமாக முழு அளவில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட அவர்களால் இயலவில்லை.

இதைத் தொடர்ந்து, அந்த மலைப்பகுதி மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிடார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, தகவல் சேகரிக்கும் நூதன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, நாம் குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான் கி.பி. 802இல் அங்கோர் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது. இப்போது, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து 20 லட்சம் மக்கள் அங்கோர்வாட் கோவிலைப் பார்வையிடுகின்றனர்.

இந்த நகரம் குறித்த தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர் குழுவின் தலைவர் ஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், ""தொன்மையான நூல்களின்படி புகழ்பெற்ற வீரனும், மன்னனுமான இரண்டாம் ஜெயவர்மனுக்கு மலை மீது அமைந்த தலைநகர் இருந்தது தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதமாகும்.

இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும், கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்'' என்றார்.

இந்த நிபுணர் குழுவின் இணைத் தலைவரான சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேமியன் இவான்ஸ் கூறுகையில், ""இந்த நகர் குறித்த தகவல்கள் மூலம் இன்றைய சமூகத்துக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கலாம். மலை மீது அமைந்த நகரில் காடுகள் அழிப்பு மற்றும் நீர் நிர்வாகத்தை அதிகம் சார்ந்திருந்தது போன்றவற்றால் இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம் '' என்றார்.

இந்த நகரில், இதற்கு முன் அடையாளம் காணப்படாத 30 கோவில்களும் இருந்துள்ளது லேசர் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட உள்ளன.

அதன் பின், நாம் குலேன் காடுகளுக்குள் தொல்லியில் நிபுணர்கள் நுழைந்து கள அகழாய்வில் ஈடுபட்டு, மகேந்திர பர்வதம் நகரில் மக்களின் வாழ்க்கை, நாகரிகம் ஆகியவை குறித்து தகவல் சேகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தெற்காசியா மீது சுமார் 600 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திய அங்கோர் பேரரசு உருவான விதம் மற்றும் அது குறித்த மேலும் பல தகவல்களும் இந்த அகழாய்வில் கிடைக்க வாய்ப்புள்ளது.

"காமராஜர் ஒரு சகாப்தம்"


           
கர்மவீரர் காமராஜர் தனக்கு‍ பிறந்தநாள் வாழ்த்து‍ சொன்ன திரு.ரத்தினவேலு‍என்பவருக்கு‍ அனுப்பிய பதில் கடிதம்.

                           

                         King Maker & man who brings Kings infront us by his acting - Kamaraj & Sivaji 

                               

 \






 

Like ME

Sample Text

Sample Text