Sunday, August 4, 2013

போர்க்களம்

                  "சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
                        யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
                              புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
                                     ஈன்ற வயிறோ இதுவே;
                                        தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!"

 

வீட்டில் இருக்கும் சிறிய தூணை பற்றி கொண்டு ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம், எங்கே உன் மகன் ? என்று கேட்க,

அதற்கு அந்த தாய் சொல்கிறாள்,

"இதோ புலி தங்கி சென்ற கல் குகை போன்று , ஈன்ற வயிறு இங்கே இருக்கிறது அவனை பார்க்க வேண்டும் என்றால் நேரே போர்க்களம் போ, அங்கே தான் அவன் தோன்றுவான் என்கிறாள்..!"

No comments:

Post a Comment

 

Like ME

Sample Text

Sample Text