காணாமல் போனவைகள் - "வீட்டு திண்ணைகள்"
-------------------------- -------------------------- -------------

நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில் முக்கியமானது வீட்டின் முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே இல்லை....
தாயகட்டை விளையாடவும், ஏழுகாய் விளையாடவும் சரியான இடம்...திண்ணைகள்தான்... சின்ன திண்ணையாக இருந்தால் ஒரு பக்கம் கால் பூமியில் தொங்க விட்டுக்கொண்டு விளையாடுவது ஒரு பெரிய சுகம்...
சில குடும்ப பிரச்சனைகளின் திடிர் பஞ்சாயத்துக்கள் திடும் என்று அந்த திண்ணைகளில் நிகழும்...நாட்டமைகளாக அக்கம் பக்கத்தில் இருக்கும் பெருசுகள் செயல்படும்...
காணாமல் போனவைகள் - "கொட்டப் பெட்டி"
-------------------------- -------------------------- -------------

இது பனையோலையால் பின்னப்பட்ட சிறிய கைப்பையாகும். இது போலப் பின்னப்பட்ட பெரிய பைகளும் முன்னர் பாவிக்கப்பட்டன. கொட்டப்பெட்டி பனையோலை, தென்னை ஓலை, புல், வாழை நார் என்பவற்றிலும் பின்னப்படுகின்றது. நவீன காலத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்ற சூழலுக்கு ஒவ்வாத பாவனைப் பொருட்கள் அதிகரிப்புடன் கலாச்சார மாற்றங்களும் இவ் அரிய பொருட்களின் பாவனையை வெகுவாகக் குறைத்துள்ளது. இக் கொட்டப் பெட்டிகள் பணம், நகைகள் என்பவற்றை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு பாவிக்கப்பட்டது.
காணாமல் போனவைகள் - "சுமை தாங்கிக் கல்"
-------------------------- -------------------------- ----------------

அந்தக் காலத்துல பொம்பளைங்களுக்குப் பிரசவம் பார்க்கணும்னா மாட்டு வண்டியிலதான் கூட்டிட்டுப் போவாங்க. அப்படிக் கூட்டிட்டுப் போகும்போது சிலர் இறந்திடுவாங்க.. அவங்க நினைவாகத்தான் இந்த 'சுமை இறக்கிக் கல்’லை நட்டு வைப்பாங்க. அது ஏன் இவ்வளவு உயரமா இருக்குன்னா வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பக்கத்து ஊர் சந்தையில் இருந்து வாங்கிட்டு வருவாங்க. நடந்தே வரணும்கிறதால, தலையில் வைச்சுக்கொண்டு வருவாங்க. அப்படி வரும்போது களைப்பா இருக்குன்னு இறக்கி வைக்க முடியாது. ஆள் இல்லாதப் பாதையில, இறக்கி வெச்சா திரும்பத் தூக்கி தலையில் வைக்க ஆள் இருக்க மாட்டாங்க. அந்த மாதிரி சமயத்துல இந்தக் கல்லுல சுமையை இறக்கிவெச்சுட்டு, யார் உதவியும் இல்லாம நாமளே தூக்கி தலையில் வெச்சுக்கலாம். அதான் இதை ’சுமை இறக்கிக் கல்’னு கூப்பிடுறாங்க'' .
No comments:
Post a Comment