தொடரும் அணுக் கதிர்வீச்சின் தாக்கம். மரணத்தை நிச்சயித்து பிறக்கும் ஈராக் குழந்தைகள் !

2003 ஆம் ஆண்டு அமெரிக்கா பிரிட்டன் படைகள் ஈராக் நாட்டின் மீது போர் தொடுத்தது. அப்போது அவர்கள் அடர்த்தி குறைவான உரேனியம் ( Depleted Uranium) தாங்கிய ஆயுதங்கள் அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினர். இந்த வகையான அடர்த்தி குறைவான உரேனியம் அணு உலைகளில் இருந்து வெளியாகும் அணுக கழிவுகளில் இருந்தே தயாரிக்கப் படுகிறது என்பது தான் நாம் அறிய வேண்டிய தகவல்.
இந்த அணுக்கதிர் வீச்சு கொண்ட ஆயுதங்கள் 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் பயன்படுத்தினாலும், அதன் கதிர்வீச்சு தாக்கம் இன்றளவும் ஈராக் நாட்டின் நஜாப் , பாசுல்லா போன்ற நகரங்களில் பெருமளவில் காணப்படுகிறது. இங்கு பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் புற்று நோயுடனும், உடல் சிதைவடைந்த, உருக்குலைந்த நிலையிலேயே பிறக்கிறது. அப்படியே பிறந்துவிட்டாலும் இக்குழந்தைகள் ஒரு ஆண்டுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை என்பது வேதையான தகவல்.
ஈராக் போரின் போது அமெரிக்க ராணுவம் சுமார் 440,000 கிலோ அடர்த்தி குறைவான உரேனியம் பயன்படுத்தி உள்ளது . இதன் விளைவாக ஈராக் நாட்டிலுள்ள சுவர்கள், மணல் , செங்கற்கள், மற்றும் எல்லாப் பொருட்களில் இந்த உரேனியம் அணுத் துகள்கள் பதிந்து உள்ளது.
மேலும் புற்று நோயுடன் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களை சோதனை செய்த போது அவர்களின் முடிகளில் இந்த உரேனியம் அணுத் துகள்கள் இருப்பது கண்டறியப் பட்டது. இப்போது ஈராக் மருத்துவமனைகளில் சாதாரண சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிப்படைந்த குழந்தைகளை விட புற்று நோயினால் பாதிப்படைந்த குழந்தைகளே அதிகமாக காணப்படுகின்றனர்.
ஏன் இந்த வகையான அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது ?
சாதாரண வெடிமருந்து பொருந்திய ஆயுதங்கள் பயன்படுத்தினால் அவைகள் ஓரளவு சேதத்தை உண்டு செய்தாலும் , உரேனியம் அணுத் துகள்களை தாங்கிய ஆயுதங்கள் , பெரிய சுவற்றை ஓட்டை போட்டு துளைக்கும் தன்மை உடையது. பெரிய போர் வாகனங்கள், டாங்கிகளை அழித்தொழிக்கும் வல்லமை பொருந்தியவை . அதனால் தான் இந்த அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது.
இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும் , இங்கு அமெரிக்க விட்டுச் சென்ற அணுகதிர் வீச்சு எச்சங்கள் இந்த மண்ணல் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. இதை அவ்வளது எளிதில் இந்த மண்ணில் இருந்து நீக்க முடியாது. இந்த எச்சங்கள் இந்த மண்ணில் இருந்து நீங்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம் என ஆய்வாளர்களை தெரிவிக்கின்றனர் .
பாதிப்புக்கு உள்ளான ஈராக் நகரங்களில் உள்ள தாய்மார்கள் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளவே அஞ்சுகிறார்கள். அணு ஆயுதத்தை சோதனை செய்ய அமெரிக்கா ஜப்பானில் உள்ள இரோஷிமா நாகசாக்கி நகரங்களில் அணுகுண்டு போட்டு பல லட்சம் மக்களை கொன்று ஒழித்தது நாம் அறிவோம் . ஆனால் அந்த அணு குண்டுகளின் கதிர்வீச்சை காட்டிலும் பல நூறு மடங்கு ஈராக் நாட்டில் அணுக கதிர்வீச்சை அமெரிக்கா விட்டுவிட்டு சென்றுள்ளது என்பது தான் கொடுமை.
ஈராக் நாட்டில் அணுக கதிர் வீச்சால் ஏற்பட்ட இந்த அவல நிலை உலக நாடுகளுக்கு ஓர் பாடமாக இருக்கட்டும். அணு உலைகள், அணு ஆயுதங்கள் இல்லாத உலகமே தற்போதைய தேவை. குறிப்பாக இந்தியா போன்ற ஊழல் மிகுந்த, முறையான கட்டமைப்பு இல்லாத நாடுகளில் அணு உலைகளோ , அணு ஆயுதங்களோ இருக்கவே கூடாது. இருந்தால் அது இந்திய நாட்டு மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி விடும். ஈராக் போன்று பல புற்றுநோய் தாங்கிய ஒரு தலைமுறை நமக்கு வேண்டாம் என்றால் அணுஉலைகளை இந்திய மக்கள் யாவரும் இழுத்து மூடுவோம்.
தமிழ் மண்ணில் இருந்தும் அகற்றுவோம். தூய்மையான மாசில்லா சுற்றுப்புறச் சூழலை நம் எதிர்கால சந்ததிக்கு வழங்குவோம்.
No comments:
Post a Comment