ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
- 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
- 2. ஆறுவது சினம் / 2. Control anger.
- 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
- 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
- 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
- 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
- 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
- 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
- 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
- 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
- 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
- 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
- 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
- 14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
- 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
- 16. சனி நீராடு / 16. Shower regularly.
- 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
- 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
- 19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
- 20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
- 21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
- 22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
- 23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
- 24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
- 25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
- 26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
- 27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
- 28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
- 29. இளமையில் கல் / 29. Learn when young.
- 30. அரனை மறவேல் / 30. Cherish charity.
- 31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
- 32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
- 33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
- 34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
- 35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
- 36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
- 37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
- 38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
- 39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
- 40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
- 41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
- 42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
- 43. கெளவை அகற்று / 43. Don't vilify.
- 44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
- 45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
- 46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
- 47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
- 48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
- 49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
- 50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
- 51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
- 52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
- 53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
- 54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
- 55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
- 56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
- 57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
- 58. தீவினை அகற்று / 58. Don't sin.
- 59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
- 60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
- 61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
- 62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
- 63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
- 64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
- 65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
- 66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
- 67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
- 68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
- 69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
- 70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
- 71. நூல் பல கல் / 71. Read variety of materials.
- 72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
- 73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
- 74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
- 75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
- 76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
- 77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
- 78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
- 79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
- 80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
- 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
- 82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
- 83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
- 84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
- 85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
- 86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
- 87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
- 88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
- 89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
- 90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
- 91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
- 92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
- 93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
- 94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
- 95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
- 96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
- 97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
- 98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
- 99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
- 100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
- 101. வித்தை விரும்பு / 101. Long to learn.
- 102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
- 103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
- 104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
- 105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
- 106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
- 107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
- 108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
- 109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.
- ஔவையார்.
No comments:
Post a Comment